சர்ச்சைகளுக்கு மத்தியில் வைரலாகும் ஷாருக்கானின் புகைப்படம்! என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவின் பிரபல முன்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் இறுதிச்சடங்கில் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது உதவியாளர் பூஜா டாட்லணி பிரார்த்தனை செய்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் முன்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது இறுதி சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது உதவியாளர் பூஜா டாட்லணி லதா மங்கேஷ்கருக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.
அப்போது நடிகர் ஷாருக் கான் தனது மத வழக்கப்படி துவா செய்தும், அவரது உதவியாளர் பூஜா டாட்லணி தனது மத வழக்கப்படி கைகளை கூப்பி லதா மங்கேஸ்கர்க்கு மரியாதையை செய்தனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் தங்கள் இணைய பக்கத்தில் "இது தான் இந்தியா என்றும் வேற்றுமைகளால் நாங்கள் பிணைந்து இருப்பதாகவும் அதுவே எங்கள் ஒற்றுமை” என குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
This is India! pic.twitter.com/lvqJ2599ca
— Cibi Chakravarthy (@CforCibi) February 6, 2022