குடும்பத்துடன் இருக்கும் போது வனிதாவை பார்த்துருக்கீங்களா? வருத்தத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்
குடும்பத்துடன் இருக்கும் பொழுது நடிகை வனிதா மற்றும் அவரின் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார்.
இவர் கோலிவுட் சினிமாவையும் சேர்த்து சுமாராக 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என இரண்டு மனைவிமார்கள் இருக்கிறார்கள்.
இவர்களுள் முதல் மனைவியின் மூலம் கவிதா, அனிதா, அருண்விஜயும் இரண்டாவது மனைவியின் மூலம் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவியும் ஆக 6 பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மாத்திரம் சில குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக இருந்து வருகிறார்.
குடும்பமாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
வனிதா வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டது.
விஜயகுமாரின் குடும்பம் என இணையத்தில் தேடும் பொழுது வனிதா இல்லாமல் மற்ற சகோதரிகள் இருக்கும் புகைப்படங்கள் மாத்திரம் இருக்கின்றன.
இப்படியொரு நிலையில் நடிகை வனிதா அவரின் சமூக வலைத்தளங்களில் குடும்பமாக இருக்கும் பொழுது மகன், அம்மா, கணவர் என அனைவரின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் பொழுது வனிதாவின் மூன்று குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் தற்போது குழந்தைகளும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் வனிதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |