நடிகை த்ரிஷா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம்... எந்த நாட்டில் தெரியுமா?
நடிகை த்ரிஷா அழகிய சேலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தார்.
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார்.
80களில் நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் ஒரு சாராரை குஷியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜாப்பானில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெள்ளை நிற சேலையுடன் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |