ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா மோகன்... குவியும் லைக்குகள்
நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா மோகன்
2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து சினிமா துறையில் கால் பதித்தவர் தான் பிரியங்கா மோகன்.
அதனை தொடர்ந்து "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அறிமுகமான இவர், இந்த படத்தின் வெற்றியடைந்ததுடன் சிவா - பிரியங்கா கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தமையால் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.
இந்த படமும் ஹிட்டானதால் தழிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்று கிடைத்தது. இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக, 'எதற்கும் துணிந்தவன்', படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்திருந்தார். சினிமாதுறையில் கால்பதித்து குறுகிய காலத்திற்குள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டும் பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |