“தொழிலதிபருடன் திருமணமாகிவிட்டது” - வதந்திகளுக்கு பதில் கொடுத்த த்ரிஷா
த்ரிஷா தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக பரவி வரும் வதந்திக்கு தக்க பதிலடி ஒன்றை நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா
தமிழ்த்திரை உலகில் தற்போது சுமார் 22 ஆண்டு காலமாக தன்னுடைய நடிப்பு திறமையால் தனக்கென ஒரு இடம் பதித்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் சில சர்ச்சசைகள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
நடிகர் விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என கூறி கோர்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பின்னர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நகழ்ச்சி ஒன்றில் ஒரே நிற ஆடையில் பங்கேற்றது இன்னும் சர்ச்சை தீ போல் பரவ செய்தது. இப்படி இருக்க தற்போது புதிய விடயமாக நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஊடகவியலாளர் சித்ரா லட்சுமாணன் தனது யூடியூப் சேனலில் த்ரிஷா சினிமாவை விட்டு விலக இருக்கும் தகவல் உண்மை தான் என தெரிவித்தும் இருந்தார். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் தீ போல பரவி வருகின்றது.
இதற்கு நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா " நான் சினிமாவை கைவிட்டு ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு நான்கு குழந்தைகளையும் பெற்றுவிட்டேன். அந்த குழந்தைகளுக்கு நேற்றோடு இரண்டு வயது ஆகிவிட்டது.
இன்னும் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா இல்லை இன்றைக்கான கட்டுக்கதைகளின் கோட்டா முடிந்துவிட்டதா?" என்று த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |