கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்திருக்கும் தமன்னா: ஒரு காரின் விலை மட்டும் இத்தனை லட்சமா?
ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு பிறகு வேற லெவலில் பிரபலமாகியிருக்கும் தமன்னாவிடம் எவ்வளவு சொத்து இருக்கிறதென்று தெரியுமா?
நடிகை தமன்னா
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இன்னும் அதிகம் பிரபலமானார்.
சொத்துமதிப்பு
சினிமாவில் 17 ஆண்டுகளாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் நடிகை தமன்னா. அந்தவகையில் தமன்னா ஒரு ஆண்டிற்கு கிட்டத்தட்ட 12கோடி சம்பாதிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் சினிமாவைத் தவிர வேறு நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகவும் இருக்கிறார். மேலும், ஒரு படத்திற்கு ஐந்து கோடிக்கு சம்பளம் வாங்குகிறார்.
அதுவும் ஐட்டம் பாடலுக்கு 60 இலட்சத்திற்கு சம்பளம் பெறுகிறார். இவருக்கு 16 கோடி மிகப் பெரிய அப்பார்ட்மென்டிலும் வசித்து வருகிறார்.
இதை தவிர லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ 320i, பென்ஸ் மாற்று மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |