750 படங்கள்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை... யார் இந்த கோட்டா சீனிவாச ராவ்?
பிரபல மூத்த நடிகராகவும், அரசியல் வாதி, பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட கோட்டா சீனிவாச ராவின் மறைவு திரையுலகனரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோட்டா சீனிவாச ராவ்
விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பரி ஹிட் அடித்த ‘சாமி’ படத்தில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.
அவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சாமி தான் அவருக்கு முதல் படம் என்றாலும், மிகவும் பரீட்சையமான வில்லன் போல் நடித்திருப்பார்.
அதனால் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய அரம்பித்தது. தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல சூப்பர் ஹிட் படங்களில் நடத்து தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நடிகராக மட்டுன்றி பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் தனது திறமை வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் தான் கோட்டா சீனிவாச ராவ்.
அதுமட்டுமன்றி 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரையில் விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஜதராபாத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். அவரது வயது 83 ஆகும். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |