திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை டாப்ஸி
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட்டானது.
இதனால் அவர் அடுத்தடுத்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். குறிய காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த இவர், மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர்களின் திருமணம் மார்ச் மாத இறுதியில், உதய்பூரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |