நடிகை சுவலஷ்மியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
அஜித், விஜய் என நடிகர்களுடன் நடித்து அசத்திய நடிகை சுவலஷ்மியின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த இவர், 1995ம் ஆண்டு தல அஜீத் நடிப்பில் வெளியான ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி ஆனார். பின்பு விஜய்யுடன் லவ் டுடே படத்தில் நடித்தார்.
பின்பு பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் திரும்பிய இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு நதிக்கரையிலே என்ற படத்தில் நடித்து விருதினைப் பெற்றார். இதுவே இவரது கடைசி படமாகவும் இப்படம் அமைந்தது.
குறித்த படத்திற்கு பின்பு திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பின்பும் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவரின் ரசிகர்களுக்காக குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது.