மரணத்தை முன்பே அறிந்துக் கொண்டாரா... தற்போது வெளியாகி வைரலாகும் பழைய இன்ஸ்டா பதிவு
சீரியல் நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் உயிரிழந்ததையடுத்து அவர் எப்போதோ வெளியிட்ட இன்ஸ்டா பதிவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.
சீரியல் நடிகை ஸ்ருதி
பிரபல தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நாதஸ்வரம், மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
சீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த இவர், பாரதி கண்ணம்மா பாகம் ஒன்றில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த சேகர் என்பவருடன் வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றிருந்து.
இந்நிலையில், திருமணம் முடித்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றது.
மரணத்தை முன்பே அறிந்தாரா?
இந்நிலையில், உயிரிழந்த ஸ்ருதியின் கணவர் அரவிந்த சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக பகிர்ந்த வீடியோ ஒன்று ரசிகர்களை மிகவும் வேதனையடைய வைத்திருக்கிறது.
குறித்த வீடியோவில் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பாரிஸிற்கு சென்று வீடியோவை எடுத்து “நல்ல நினைவுகளுடன் இறக்க வேண்டும், நிறைவேறாத கனவுகளுடன் அல்ல”என்று பதிவிட்டுள்ளார்.
இதனை கவனித்த நெட்டிசன்கள் இறப்பதற்கு முன்பு தன் மரணத்தை தானோ அறிந்துக் கொண்டாரா என கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |