கணவர் இறந்த மறுநாளே நடிகை ஸ்ருதி வெளியிட்ட காணொளி...
பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ஷண்முகபிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், ஸ்ருதி தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதி
சின்னத்திரையில் நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ருதி, அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும்போதே நடிப்பிற்கு வந்த இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 என்ற போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் அரங்கேறியுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்பு சீரியலிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
கணவர் உயிரிழப்பு
தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமல் உயிரிழந்தார்.
அரவிந்த் சேகருக்கு வெறும் 30 வயதே ஆகியுள்ள நிலையில், இவரது இழப்பு பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ள நிலையில், நடிகை ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், அனைவருக்கும் வணக்கம் அரவிந்துடைய இறப்புக்கு நிறைய பேரு நேரில் வந்து ஆறுதல் கொடுத்து சப்போர்ட் ஆக இருந்தீங்க. நிறைய பேரு மெசேஜ் பண்ணி ஆறுதல் கொடுத்துட்டு இருக்கீங்க. அதுக்கு எல்லாத்துக்கும் நன்றி கூறியதோடு, தேவையற்ற வதந்தி பரப்புவதைக் குறித்து உருக்கமாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |