சீரியலில் களமிறங்கிய சோனியா அகர்வால்... 43 வயதிலும் குறையாத இளமை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் சோனியா அகர்வால் எண்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் 7ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
[]
தன்னை காதல் கொண்டேன் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனையே காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது சீரியல்களில் நடித்து வருகின்றார்.
சீரியலில் சோனியாக அகர்வால்
புதுப்பேட்டை படத்திற்கு பின்பு நடிகை சோனியா அகர்வால் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது சீரியல்களில் நடித்து வருகின்றார்.
நாணல் மற்றும் மல்லி தொடர்களில் நடித்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகின்றார்.
கயல் சீரியல் தந்தையை இழந்த இளம்பெண் ஒற்றை ஆளாக தந்தையைப் போன்று குடும்பத்தை கவனித்து வரும் கதையாகும். இதில் கயலின் அண்ணனுக்கு பிரச்சனை எழுந்த நிலையில், அவர் சோனியா அகர்வால் வீட்டில் தான் சமையல் வேலை செய்துள்ளார்.
ஆனால் தற்போது கயலின் அண்ணன் மூர்த்தி எங்கிருக்கிறார் என்று அறியாமல் இருந்த நிலையில், தற்போது சில உண்மைகள் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |