வெளிநாட்டில் செம்ம ஸ்டைலிஷாக நடிகை சினேகா... வைரலாகும் புகைப்படம்
நடிகை சினேகா ஸ்டைலிஷாக வெளிநாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.

நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.
ஸ்டைலிஷான புகைப்படம்
தற்போது நடிகை சினேகா குழந்தைகள் வளர்ந்த பின்பு மீண்டும் நடிக்க வந்ததுடன், மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
தற்போது சினேகா வெளிநாட்டில் செம ஸ்டைலிஷ் உடையில் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.






| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |