கேஸ் சிலிண்டருக்கு பணத்தால் ஆரத்தி எடுத்த பிரபல நடிகை... ட்ரெண்டாகும் காட்சி
பிரபல நடிகை சமீரா ரெட்டி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சிலிண்டர் தொடர்பான ரீல்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
சமீரா ரெட்டி
தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை சமீதா ரெட்டி. இவர் தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஈரான், இஸ்ரேல் போரின் தீவிரத்தினால் இந்தியாவிற்கு வரும் எரிபொருளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்கள் கடந்த பின்பே கேஸ் புக் செய்யவும், மறு சிலிண்டர் பெறவும் முடியும்.
இந்நிலையில் சமீரா ரெட்டி தனது வீட்டிற்கு வந்த கேஸ் சிலிண்டருக்கு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்ததுடன், பணத்தால் ஆரத்தி எடுத்துள்ளார்.
மேலும் சிலிண்டர் காபி கொடுத்து உபசரித்து, அதன் தலையில் ராஜகிரீடத்தையும் வைத்து மாஸ் காட்டியுள்ளார். சமீரா ரெட்டியின் இந்த ரீல்ஸ் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |