Simran: 49 வயதில் இப்படியொரு நடனமா? வாயடைக்க வைத்த சிம்ரனின் காணொளி
நடிகை சிம்ரன் தனது 49 வயதில் பயங்கர எனர்ஜியுடன் ஆடிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சிம்ரன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமாவில் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த இவர் திருமணத்திற்கு பின்பு பெரும்பாலும் நடிக்காமல் இருந்தார். அதாவது குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிவு செய்து நடித்தார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் மீண்டும் சினிமாவில் அசத்தி வருகின்றார். கடந்த ஆண்டில் வெளியாகிய டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றியை அளித்தது.

தெறிக்கவிடும் நடனம்
நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹிப் ஹாப் பாடல் ஒன்றிற்கு அட்டகாசமாக நடனமாடி காணொளி வெளியிட்டுள்ளார்.
அதாவது பா் டப்பா பாடிய பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. மேலும் பல லைக் மற்றும் கருத்துக்களையும் பெற்றும் வருகின்றது.
விஜய்யுடன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரன் ஆடிய நடனத்தை தற்போது ரசிகர்கள் நினைவு கூர்ந்து அவரை பாராட்டி வருகின்றனர். 49 வயதிலும் இவ்வளவு எணர்ஜியா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Stepping in to hip-hop zone and loving the energy 🔥#SundayGroove #HipHopVibes #NeverStopLearning pic.twitter.com/lQVGrlrtT8
— Simran (@SimranbaggaOffc) March 15, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |