விஜய் கிட்ட இப்பவும் அது இருக்கு! முதல்வர் பற்றி எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி
நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சமீபத்தில் முதல்வர் விஜய்யை சந்திக்க சென்ற போது விஜய் அவரிடம் பேசிய விடயங்களை மிகவும் நெகிழ்ச்சியாக கூறி உள்ளார்.

முதல்வர் விஜய்
தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது முதலமைச்சர் விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிலர் நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் ஆரம்பத்தில் நடிகர் தற்போது தான் முதல்வராகி உள்ளார். எனவே அவரை திரைத்துறையில் இருந்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் வந்து வாழ்த்து கூறி சென்றுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சமீபத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்நதிப்பில் விஜய்யுடன் அவர் பேசிய விடயங்களை அவர் செய்தியாளர்கயள் சந்திப்பில் கூறி உள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி
செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர் இவ்வாறு கூறினார் அவர் கூறியது “விஜய்யை இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், எங்களது சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. 'பார்க்கிங்' திரைப்படத்தில் எனது நடிப்பை விஜய் பாராட்டியதுடன், தேசிய விருது பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

என் மனைவி விஜய்யின் தீவிர ரசிகை. தேர்தலில் தவெக முன்னிலை பெற்ற செய்தி வந்தபோது, அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார் என்று விஜய்யிடம் தெரிவித்தேன்.
இதைக் கேட்ட உடனே, என் மனைவியுடன் விஜய் தொலைபேசியில் பேசினார்.
நடிகராக இருந்தபோது என்னிடம் காட்டிய அதே அன்பையும் மரியாதையையும், இன்று முதல்-அமைச்சராக இருந்தும் விஜய் காட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |