இன்னும் பழசை மறக்காத சமந்தா.. நாக சைதன்யாவுக்கு கூறிய வாழ்த்து பதிவு
நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டு ஹனிமூனில் இருந்து வரும் நிலையில் சமந்தாவின் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவரது பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினி உலகில் உச்சத்தை தொட்டவர் என்றும் கூறலாம். கோலிவுட்டிற்குள் மாஸ்கோவின் “காவிரி ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை.
நாக சைத்தன்யா - சமந்தா இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்து பெற்ற பின் சமந்தா மயோசிட்டிஸ் என்ற கொடியநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார்.
பிறந்த நாள் வாழ்த்து செய்தி
இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பின் நாக சைத்தன்யா- சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டு தற்போது ஹனிமூனில் இருந்து வருகிறார்.
இப்படியொரு சமயத்தில், சமந்தா- நாக சைதன்யா இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதில், கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணத்தின் போது நாக சைதன்யாவை கட்டிப்பிடித்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை நாக சைதன்யாவின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதற்காக சமந்தா அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிய பின்னரும் இதனை சமந்தா அழிக்காமல் வைத்திருக்கிறாரே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |