படப்பிடிப்பில் அசந்து தூங்கிய ராஷ்மிகா.. இயக்குநரிடம் சிக்கிய காட்சி
திரைப்பட படப்பிடிப்பின் போது அசந்து தூங்கிய ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படமொன்று ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
புஷ்பா 2
கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா அளவில் வெளியாகி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2.
இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்க்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் அல்லு அர்ஜுன் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லையாம். இவருடன் இணைந்து நடிகை ரஷ்மிக்கா மந்தனா, பஹத் பசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
அசந்து தூங்கிய ராஷ்மிகா
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் நடித்த ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பகிர்ந்த புகைப்படங்களில் ஒரு படத்தில் மாத்திரம் படப்பிடிப்பு தளத்தில் அசந்து தூங்குவது போன்று ஒரு உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன் படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |