பிரபல சீரியல் நடிகையின் தம்பிக்கு ஏற்பட்ட சோகம்... கண்கலங்க வைத்த பதிவு
பிரபல சீரியல் நடிகையான சாய் காயத்ரியின் சகோதரர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சாய் காயத்ரி
நடிகை சாய் காயத்ரி தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தற்போது நீ நான் காதல் என்ற சீரியலில் மீண்டும் நடித்து வருகின்றார்.
ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நீ நான் காதல் சீரியலிலிருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி தான் நடத்திவரும் தொழிலிலும் முன்னேறிவரும் இவர் சோகமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சாய் காயத்ரியின் தம்பி கார்த்திக் பாலாஜி எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சாய் காயத்ரி வெளியிட்டுள்ள பதிவில், எனது உடன்பிறப்பை இழந்துட்டேன். Lost My Brotherhood என்றும் என்னடா உனக்கு அவ்வளவு அவசரம்? அக்காவை தனியா விட்டுட்டு போயிட்டியே டா... ஏன் டா தம்பி... அக்காகிட்ட திரும்பி வந்துடுடா... நீ இல்லாமல் எப்படிடா இருக்கப்போறேன் பாலாஜி என்று புகைப்படத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சாய் காயத்ரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
