அமைச்சராக இப்படி செய்யலாமா? புத்தாண்டு கொண்டாடத்தால் சர்ச்சைக்கு ஆளான ரோஜா- வைரல் காணொளி
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமைச்சர் ரோஜா செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரோஜா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரோஜா.
இவர் கோலிவுட்டில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வாய்ப்பு குறைந்த காலப்பகுதியில் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அரசியல் வாழ்க்கையில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் ரோஜா ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
வசமாக சிக்கிய ரோஜா
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையோட்டி டிஸ்கோ கிளப் ஒன்றில் டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார்.
இதன் போது எடுக்கபட்ட வீடியோக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இப்படியா வேலைகள் செய்வது? என அரசியல் வட்டாரங்கள் முனுமுனுத்து வருகின்றது.
என்ன தான் பல சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு முகங் கொடுத்தாலும் ரோஜா தனது பணிகளில் சரியாக இருந்து வருகின்றார்.
இதன்படி, கிறிஸ்துமஸ் தினத்தன்று நத்தார் பாப்பா வேடம் அணிந்து கொண்டு மக்களுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
இது போன்ற செயல்கள் ரோஜாவின் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.
While Anganwadi workers and Municipal workers are protesting even on the new year without celebrating Minister Roja is celebrating the new year in a pub. pic.twitter.com/ArsR81ctDJ
— Satya 🥛 (@YoursSatya) January 2, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |