ஆண்களுக்கு 2 நிமிடம் தான் - நடிகை ரெஜினாவின் ஓபன் டாக்; வாயடைத்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா.
இதைத்தொடர்ந்து, ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். இதனிடையே, சாகினி டாகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியாக உள்ள நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகை ரெஜினா பேட்டியளித்தபோது ஆபாச ஜோக் ஒன்றை கூறி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், பேசிய ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, “ஆண்களும் மேகியும் ஒரு மாதிரியானவர்கள். ஏனென்றால் இரண்டும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும்” என பேசியுள்ளார்.
ஆனால், தொகுப்பாளருக்கு அதை புரிந்து கொள்ள சிறிது நேரமாகிய நிலையில், அருகிலிருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதற்கு நெட்டிசன்களிடையே பலவிதமான கமெண்ட்ஸ்கள் எழுந்துள்ளன.
Mass? attitude with cute looks???♀️@ReginaCassandra @i_nivethathomas ❤️❤️ pic.twitter.com/frYqmRkvop
— Gowri? (@prettyGowri) September 9, 2022