யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை ராஷ்மிகா - மாப்பிளை யார் தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டாவின் நிச்சயதார்த்தம் யாருக்கும் தெரியாதவாறு ரகசிய மறையில் நடந்துள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2' படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இருந்தது.
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்துனொண்டிருந்தன. ஆனால் இதில் சம்பந்தபட்ட இருவரும் எதுவும் கூறவில்லை.
இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம், டியர் காம்ரே'ட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இதற்கிடையில், இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும், ஓட்டல்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் படங்களும் வெளியானதை பார்த்து பலரும் காதலை உறுதிப்படுத்தி பேசினர்.
விஜய் தேவரகொண்டாவின் வீட்டு நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொள்கிறார். 'புஷ்பா 2' படம் பார்க்கவும் விஜய்தேவரகொண்டா குடும்பத்தினருடன் ராஷ்மிகா தியேட்டருக்கு சென்ற வீடியோவும் வெளியானது.
இவர்களின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதே போல் சென்னையில் நடந்த, புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 'நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளவர் ஒரு நடிகரா? என தொகுப்பாளர் கேட்டதற்கு இது எல்லாருக்குமே தெரிந்தது தான் என கூறி, விஜய் தேவரகொண்டா உடனான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும், இவர்கள் திருமணம் ஆறு மாதங்களுக்கு பிறகு நடைபெற இருப்பதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |