பிரபல நடிகை ரம்பா சென்ற கார் விபத்து! மருத்துவமனையில் மகள்
பிரபல நடிகையான ரம்பா, தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கனவுக்கன்னி ரம்பா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவர் ரம்பா.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றார், ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.
கனடாவில் வாழ்க்கை
இந்த அழகான தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர், 2 மகள்கள், ஒரு மகன் என சந்தோஷமாக குடும்பம் நடத்தி வரும் ரம்பா, தன் வாழ்வின் முக்கியமான விஷயங்களை புகைப்படங்களாக, வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
ஆனால் சற்றுமுன் அவர் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
கார் விபத்து
அதாவது பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,
பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது
நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம், என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
ரம்பாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.