நடிகை ராதிகாவா இது?... புதிய லுக்கினைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராதிகா, வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிப்பில் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது சித்தி 2 சீரியலில் கம்பீரமாக நடித்திருக்கும் ராதிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ராதிகாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
Cheering myself up ,hope u all like the look???? pic.twitter.com/M5XCMu4cgi
— Radikaa Sarathkumar (@realradikaa) April 28, 2021