நீச்சல் உடையில் மூன்று நாயகிகள்! நடிகை ராதா பகிர்ந்த வைரல் புகைப்படம்
1980 களில் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தில் மூன்று நாயகிகள் நீச்சல் உடையில் கமலுக்கு பக்கத்தில் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இன்றைய சினிமாவில் நீச்சல் உடையில் நடிகைகள் நடிப்பது சாதாராண ஒன்றாகிவிட்டது, அதுவே 1980களில் கடினமான ஒன்றே.
ஆடை குறைவாக அணிந்து கொண்டு நடிக்கவே கூச்சப்பட்ட நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனாலும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்லும் நடிகைகள் கவர்ச்சி காட்டிச் செல்வார்கள்.
இதை முறியடிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள், 1981ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படத்தில் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோர் நீச்சல் உடையில் நடிக்க வைத்திருப்பார்.
மூன்று பேரும் கமல்ஹாசனை சுற்றி நிற்கும் புகைப்படம் அப்போதே வைரலாக பேசப்பட்டது.
தற்போது இந்த படத்தை பகிர்ந்துள்ள ராதா, அப்போது அது ஒரு வேலையாக இருந்தாலும் போராட்டமான காலமாகவே இருக்கிறது.
எனக்கு பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று, எங்களை விட மாதவி மிக உணர்வுபூர்வமாக இருந்ததை மறக்க முடியாது.
எங்களுக்கு அழகான ஆடைகளை வடிவமைத்து வாணி கணபதியை நினைவுகூர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
This is one of my favourite memory from the days of shoot for movie tik tik tik. Back then it might have looked part of job but now if I look back I admire the struggle and strength we have put in to look so, and special admiration goes to Madhavi who has that effortless look on pic.twitter.com/d6SV5iVGjb
— Radha Nair (@ActressRadha) March 21, 2023