கணவரை பிரிந்ததும் மாடர்ன் உடையில் ஆட்டம் போட்ட நடிகை ரக்ஷிதா!!
பிரபல சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா மாடர்ன் உடையில் கடற்கரையில் எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் கனவுக்கன்னி
பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமானாலும், இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் தான்.
தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய, சின்னத்திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்
தொடர்ந்து பிற மொழி படங்களிலும் நடித்து வந்தவர், மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
இத்தொடரிலும் ரக்ஷிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில், திடீரென சீரியலிலிருந்து விலகினார்.
திடீர் விவாகரத்து
இந்நிலையில் காதல் கணவரை ரக்ஷிதா விவாகரத்து செய்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சில மாதங்களாகவே தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறினார் ரக்ஷிதா.
எப்போதும் அழகான சேலையில் வலம் வரும் ரக்ஷிதா, வித்தியாசமாக மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அழகான வெள்ளை நிற கவுனில் ரக்ஷிதாவின் அழகை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.