நடிகை ரக்ஷிதாவின் அடர்த்தியான கூந்தலுக்கு இதுதான் காரணமாம்! அவரே சொன்ன சீக்ரெட்
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷிதா தன்னுடைய அழகு குறிப்புகளை ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமானாலும், இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் தான்.
தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய, சின்னத்திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அழகின் ரகசியம்
பெரும்பாலும் புடவைகளை விரும்பி அணியும் ரக்ஷிதா, 33 வயதிலும் அழகு தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறாராம், அது ஏன்? என்ன மாதிரியான டிப்ஸ்களை பாலோ செய்கிறார் என்பது குறித்து அவரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், எந்த ஊருக்கு சென்றாலும் தன்னுடைய அம்மா காய்ச்சி கொடுத்த தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவாராம், அதில் செம்பருத்தி, கறிவேப்பிலை, வெந்தயம் என எல்லாம் சேர்ந்து இருக்குமாம்.
இதுதவிர கற்றாழை ஜெல், முட்டையின் வெள்ளைக்கருவையும் பயன்படுத்துவாராம், ஊறவைத்த பச்சை பயறு, வெந்தயம் இரண்டையும் அரைத்து பேஸ்டை கூந்தலின் தடவினாலும் முடி அடர்த்தியாகும் என்கிறார்.
இப்படி இயற்கையான பொருட்களை கொண்டு முடியை பராமரிப்பதால், எந்த பாதிப்பும் இல்லாமல் முடி வளர்வதாக தெரிவிக்கிறார் ரக்ஷிதா.
