பழம்பெரும் நடிகை புஷ்பலதா மறைவு- சோகத்தில் திரையுலகம்
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா (87) காலமானார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
புஷ்பலதா
கடந்த 1961ம் ஆண்டு, “கொங்கு நாட்டு தங்கம்” என்ற திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் தான் புஷ்பலதா.
இதனை தொடர்ந்து, அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருந்தார்.
ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து, “நானும் ஒரு பெண்”என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் மூலம் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
மறைவு
Neeya Naana: பிக் பாஸ் ரயானுடன் நடனமாடிய தோழி! ஆண் நண்பனின் ரியாக்ஷனைப் பார்த்து கோபிநாத் செய்த காரியம்
இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த புஸ்பலதா வயது மூப்பின் காரணமாக, தனது 87வது வயதில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |