படிக்காத கணவரை விட்டுக்கொடுத்து பேசிய மனைவி! கோபிநாத்திற்கு ஆதரவாக பிரபல நடிகை கருத்து
தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா’. இந்த நிகழ்ச்சியின் அண்மை டாப்பிக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அதன்படி அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் Vs குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா?வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்! @Gobinath_C pic.twitter.com/RUaSsQuViN
— Priya BhavaniShankar (@priya_Bshankar) September 11, 2022
இந்நிகழ்ச்சியில் கணவரின் இயலாமையை கேலி செய்யும் மனைவியிடம் அறியாமை தவறில்லை என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் அந்த மனைவியிடம் கணவருக்காக பரிந்து பேசுவார்.
மேலும் அவருக்கு பரிசும் வழங்குவார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலான நிலையில் பலரும் இந்த டாபிக் குறித்து தங்களது கருத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய்.
உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.