நடிகை பூர்ணா மகனா இது? வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகை பூர்ணா தனது மகனின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
நடிகை பூர்ணா
தமிழில் முனியாண்டி , விலங்கியல் மூன்றாம் ஆண்டு, வேலூர் மாவட்டம், வித்தகன் , சவரக்கத்தி, தலைவி உட்பட பல படங்களில் நடித்தவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை பூர்ணா.
அதனை தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவர் ஷாம்னா காசிம் என்ற தனது நிஜப் பெயரில் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்தவர்.
பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2022ஆம் ஆண்டு நடிகை பூர்ணா தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆனார்.இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நடிகை பூர்ணா தனது மகனின் பிறந்தநாளை வெகு விமர்சையாக குடும்பத்துடன் கொண்டாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |