கோடான கோடி பாடலுக்கு நடனமாடிய நடிகையா இது? வைரல் புகைப்படம்
நடிகை நிகிதா துக்ராலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களினால் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் வரும் கோடான கோடி பாடலுக்கு நடமாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிகிதா துக்ரால்.
தெலுங்கு சினிமா மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை நிகிதா துக்ராலின்.
இதனைத்தொடர்ந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
2003-ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சரத்குமாரின் சத்ரபதி, சத்யராஜின் வெற்றிவேல் சக்திவேல் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து முரண், அலெக்ஸ் பாண்டியன், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பிஸியாக இருந்ததால் தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இவர் 2017 ஆம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்த இவர் குழந்தை பிறந்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் நிகிதா அவ்வப்போது கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
அதன்படி நிகிதாவின் சமீப இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |