ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை! தாயார் வெளியிட்ட பகீர் உண்மை
தாய்லாந்து நாட்டு பிரபல நடிகை ஒருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், நடிகையின் தாய் கொலை என்று குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்த் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக வலம் வருவதுடன், பல சீரியல்களில் நடித்துள்ளவர் தான் நிடாவு. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு நிடா, பாங்காக்கின் நந்தபுரி பகுதியில் உள்ள சாவ் பிரயா ஆற்றில் ஸ்பீட் போட்டில் தனது நண்பர்களுடன் போட்டிங் சென்றார். அப்போது பின் பக்கத்தில் அமர்ந்திருந்த நிடா நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், நிடா ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெக்கப்பட்டது. பொலிசார் நடத்திய விசாரணையில் நிடா பயணம் செய்த ஸ்பீட் போட் லைசென்ஸ் இல்லாமல் இயங்கியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நிடாவின் தாயார் தனது மகள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தது விபத்து அல்ல என பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். நிடா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். அவரது புகாரை தொடர்ந்து போலீசார் நடிகை நிடாவுடன் போட்டிங் சென்ற 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.