நீலிமாவின் முதல் கணவர் யார்? ரசிகர்களின் தேடலால் உடைந்த உண்மை
பிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் முதல் கணவர் யார் என்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிலையில், நீலிமா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை நீலிமா ராணி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து பிரபலமானவர் தான் நீலிமா.
இவர் கமல் ஹாசன் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்பு கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
நடிகை நீலிமா இயக்குனர் இசைவாணனை காதலித்து கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 11 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளதுடன், தற்போது நீலிமாவின் கணவரை பலரும் தந்தையா? தாத்தாவா? என்றும் கேட்டு கஷ்டப்படுத்தி வந்தனர்.
இதற்கு எல்லாம் நீலிமா சிரித்த முகத்துடன் முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களின் வயது வித்தியாசத்தை தேடி முடித்த ரசிகர்கள், தற்போது கூகுளில் நீலிமாவின் முதல் கணவர் யார் என்ற தேடலை ஆரம்பித்துள்ளனர்.
இந்த கேள்வியைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்த நீலிமா, தனக்கு தெரிந்த ஒரே கணவர் இசைவாணன் தான்... நல்லா தேடிருக்கீங்க.... என்னுடைய முதல் மற்றும் இரண்டாவது கணவர் எப்பொழுதும் இசைவாணன் தான் என்று மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார்.