சூரியனில் விழும் சனியின் கொடிய பார்வை: மே 15 முதல் 3 ராசிகளுக்கு கவனம் தேவை உங்க ராசி?
வேத ஜோதிட சாஸ்திரத்தில் நீதியின கடவுளாக பார்க்கப்டுபவர் தான் சனி பகவான். சனி பகவானின் ஒவ்வொரு அசைவம் கூட எல்லா ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் சனியின் மூன்றாம் பார்வை இன்று முதல் சூரியன் மீது விழவுள்ளது. சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது, சனியின் மூன்றாம் பார்வை சூரியன் மீது விழுகிறது.
பிரகாசமான சூரியன் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால், அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருககும். இதில் 3 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் | ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் தந்தையுடனான உறவுவில் பல பிரச்சனைகள் வரும். அதிக கோபம் கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்ல நேரிடும். எனவே கோபத்தை கட்டுபடத்தவும். பண விஷயங்கள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். |
துலாம் | துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சவால்கள் நிறைந்திருக்கும். சனியின் பார்வை விழுவதால் இந்த ராசிக்காரர்களின் பொறுமையும், முடிவெடுக்கும் திறனும் சோதிக்கப்படும். பணியிடத்தில் உங்கள் வேலையை அனைவரும் கவனிப்பார்கள். எடுக்கும் வேலையில் கவனம் தேவை. எந்த வேலையிலும் பொறுமை அவசியம். இக்காலத்தில் அளவாக பேசினால் நல்ல பலனைப் பெறலாம். |
மகரம் | மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இந்த இந்த ராசிக்காரர்கள் மிகுந்த சோம்பலை சந்திப்பார்கள். இதன் காரணமாக பல முக்கியமான வேலைகள் முடிவடையாமல் தேங்கக்கூடும். தவறான சகவாசத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கவன சிதறல் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அனுபவம் வாய்ந்த ஒருவருடன் கலந்தாலோசித்த பின் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).