30 நாட்களில் தொப்பை குறையணுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பது, உடற்பயிற்சியின்மை, தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், உடல் பருமன் மற்றும் தொப்பை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு பின்னர் உடல் ரீதியில் பல்வேறு மாற்றங்களைக் காண்பார்கள். அதில் முக்கியமான பிரச்சினை தான் தொப்பை. தொப்பை பெண்களின் அழகை மாத்திரமன்றி ஆரோக்கியத்தையும் வலுவாக பாதிக்கின்றது.
இதனை எடுத்த எடுப்பிலேயே டயட், உடற்பயிற்சி செய்து குறைத்து விட முடியாது. அதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் என்பன இன்றியமையாதது.
ஆனால் ஒருசில பழக்கங்களை தினமும் காலையில் மேற்கொண்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுப்பதுடன் மீண்டும் கொழுப்பு படியாமல் தடுக்க முடியும். தினசரி காலையில் எவ்வாறான பானங்களை பருகுவது தொப்பையை வெகுவாக குறைக்க உதவும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சியா விதை
உடல் எடையைக் குறைக்க உதவும் மிகவும் சக்தி வாய்ந்த பானங்களுள் சியா விதை நீர் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து செறிந்து காணப்படுவதால், அது செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை திறம்பட செயல்பட பெரிதும் துணைப்புரியும்.
அதோடு வயிற்று உப்புசத்தையும் தடுத்து செரிமான கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இந்த பானத்தை தினசரி காலையில் பருகிவர 30 நாட்களில் தொப்பை பிரச்சினையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
இஞ்சி ஜூஸ்
இஞ்சி ஏராளமான ஆரோக்கிய மற்றம் மருத்துவ நன்மைகளுக்கு பெயர் பெற்றது. அப்படிப்பட்ட இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்த உதவுவதுடன் விரைவில் தொப்பை பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும்.
க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை துண்டுகள்
க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டிலுமே சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றது. க்ரீன் டீயில் அதிகளவில் கேட்டசின்கள் காணப்படுகின்றது.
இவை மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களை கரைக்க வைக்கிறது. மறுபுறம் எலுமிச்சை நல்ல ப்ளேவரை தருவது மட்டுமின்றி, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.
மற்றும் நச்சுநீக்கத்திற்கு உதவுகிறது. எனவே தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து குடிக்கும் போது, விரைவில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
லெமன் பெப்பர் பானம்
தினசரி காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூளையும் சேர்த்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் 30 நாட்களில் தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.
எலுமிச்சை, மிளகு ஆகிய இரண்டிலும் உடலின் வெப்பத்தை தூண்டும் கலவைகள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறையை ஊக்குவிப்பதில் ஆற்றல் மிக்கவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |