திருமணத்தன்று நடிகை நமீதாவிற்கு இப்படி நடந்ததா? குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வைத்த பொருள் என்ன?
நடிகை நமீதா தனது திருமணத்தின் போது நடைபெற்ற சம்பவத்தை குறித்து வெளிப்படையாக கூறியு்ளளார்.
நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலமாக அறிமுகமாகிய நமீதா, தனது அழகினாலும், கவர்ச்சியான நடனத்தினாலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார்.
பின்பு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், தனது உடல் எடை அதிகரித்ததால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
பின்பு 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நமீதாவிற்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
அரசியலிலும் சேர்ந்து கலக்கி வரும் நமீதா தனது திருமணத்தில் நடைபெற்ற சம்பவத்தைக் குறித்து கூறியுள்ளார்.
குப்பைத் தொட்டியில் போடப்பட்ட பொருள்
வீரேந்திர சௌத்ரியை முதன்முதலாக பார்த்த நமீதாவிற்கு அவரைப் பிடித்துவிட்டது. ஆனால் அவர் நமீதாவைக் கண்டுகொள்ளவில்லையாம்.
பின்பு இருவரும் பேசி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருப்பதியில் தெலுங்கு முறைப்படி நடைபெற்றுள்ளது.
அப்பொழுது வெற்றிலை, சீரகம் போன்ற மங்கள பொருட்களை நமீதா தலையில் வைத்துள்ளனர். அதனை குப்பை என்று நினைத்த நமீதா குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாராம்.
பின்பு அதனை கேட்ட போது குப்பைத்தொட்டியில் போட்டதாக கூறியுள்ளார். அந்த வெற்றிலையை எடுத்து மீண்டும் அவரது தலையிலேயே வைத்துள்ளார்களாம். நமீதா இவ்வாறு குப்பையில் இருந்து எடுத்து மீண்டும் வைப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
