Ethirneechal: ஏமாற்றப்பட்ட பெண்.... தர்ஷனை புரட்டி எடுத்த தர்ஷினி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் காதலித்த பெண்ணை ஏமாற்றியதால் தர்ஷினி காதலித்த பெண் வீட்டிற்கு வந்ததால் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் அப்படியே குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.
ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து தர்ஷன் ஏமாற்றியதை வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் கேள்வி கேட்டுள்ளனர். இதில் தர்ஷன் ஈஸ்வரி மீது கைவைத்துள்ளார்.
இதனால் தர்ஷினிக்கு கோபம் ஏற்பட்டு தர்ஷனை வெளுத்து வாங்கியுள்ளார். பின்பு கதிர் வந்து தர்ஷனைக் காப்பாற்றியுள்ளார்.
மற்றொரு பக்கம் குணசேகரன் சிறையில் இருந்து வெளியே வருவதை கதிர் எப்படியாவது தடுப்பதற்கும் திட்டம் தீட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |