குழந்தைகளுடன் தற்கொலை செய்ய நினைத்த நடிகை நளினி... காரணம் என்ன?
நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நளினி ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய நினைத்ததாக கூறியுள்ளார்.
நடிகை நளினி
1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின்பு நடிகர் ராமராஜனைக் காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஆனால் பிள்ளைகளுக்கு இருவரும் பெற்றோராகவே இருந்து வந்தனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நளினி, ராமராஜனை விவாகரத்து செய்து பின் சினிமா மற்றும் சீரியல்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
தற்கொலை செய்ய நினைத்த சோகம்
நளினி கூறுகையில், தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் என்றால் அது என் விவாகரத்து தான்... எனது கணவருடன் 14 வருடம் வாழ்ந்தேன், பின்பு அவரை விட்டு பிரிந்தேன்.. மார்ச் 8ம் தேதி அன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது... அதுதான் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்... எந்த பெண்ணிற்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது.
எந்த சூழ்நிலையிலும் ஒருவருடன் தான் வாழ வேண்டும், மற்றொருவரை திருமணம் செய்து வாழ வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அவர் இல்லாத வாழ்க்கையில் நாம வாழ்ந்து என்று தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.
தனியாக வாழ முடியாது என்று எனது குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த வேலையில் தான் குட்டி பத்மினி கிருஷ்ணதாசி சீரியலில் நீ நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எனக்கு நடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை... ஆனால் நான் இன்று தைரியமாக பெண்ணாக இருப்பதற்கு அந்த சீரியல் தான் காரணம்.
கணவரை இழந்து சாக நினைத்த நான் இப்பொழுது அவர் முன்பு உயர்ந்து நிற்கின்றேன் என்று கூறி கலங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |