அவருக்காக நான் இதை செய்ததே இல்லை: கணவர் குறித்து வெளிப்படையாக மீனா உருக்கம்
நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் இறப்பிற்கு பின்பு முதன்முதலாக அவரைக் குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
கணவரை நினைத்து கலங்கும் மீனா
தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் குறித்து பேசுகையில், அவர் அழகாக சமையல் செய்வார், ஆனால் எனக்கு நன்றாக சமைக்க வராது... அவ்வப்போது எதையாவது வெட்டிக் கொடுப்பதற்கு மட்டுமே என்னை கூப்பிடுவார்.
நான் அவரக்கு பிடித்தமான சாப்பாடு செய்து கொடுத்தது இல்லை... அவர் தான் எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் சமைத்து கொடுப்பார்... மிகவும் நன்றாகவே சமைப்பார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |