50 வயதாகியும் குறையாத தேவயானியின் அழகு: ஹீரோயினை மிஞ்சிய அழகில் மகள்கள்
நடிகை தேவயானி மகள்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி.
அடுத்த வருடமே அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்த இவருக்கு, பின்பு வாய்ப்புகள் அதிகமாக குவிந்தது.
விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் போது அப்பட இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட குடும்பத்தை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.
2001ம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிகளுக்கு பிரியங்கா, இனியா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
வைரலாகும் மகள்களின் புகைப்படம்
திருமணத்திற்கு பின்பு நடிக்காமல் இருந்த தேவயானி பிரபல ரிவியில் ஒளிபரப்பான புதுபுது அர்த்தங்கள் தொடரில் நடித்திருந்தார்.
இவரது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இவருக்கு வாழ்த்து கூறுவதற்கு அவரது சகோதரரும், நடிகருமான நகுல் வந்துள்ளார்.
அப்பொழுது தனது மகள்கள், சகோதரருடன் தேவயானி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
இன்று அவருக்கு பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூற தேவயானி சகோதரரும், நடிகருமான நகுல் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை பதிவிட்டு சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகை தேவயானி அதிகமான ஆடம்பரம் இல்லாமலும், மிகவும் சிம்பிளாகவே இருந்து வருவது ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்துள்ளது.
Tamizha Tamizha: பார்த்த முதல் நாளே இங்கிலீஷ் பட முத்தம்! காதலன் செயலை அரங்கத்தில் போட்டுடைத்த காதலி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |