ஜெயம் ரவி உடன் விவாகரத்தா? ஒற்றை புகைப்படத்தில் மனைவி ஆர்த்தி உடைத்த உண்மை
நடிகர் ஜெயம் ரவி தனது காதல் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன், சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பின்பு மனக்கஷ்டம் காரணமாக பிரிந்து விடுவது அதிகமாகிக்கொண்டே வருகின்றது.
நடிகர் இமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா, சமந்தா, சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ், என பல ஜோடிகள் பிரிந்துள்ளனர்.
தற்போது இந்த பட்டியலில் நடிகர் ஜெயம் ரவியின் பெயரும் வந்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
அவ்வப்போது குறித்த தம்பதிகள் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த ஜோடிகள் விவாகரத்து செய்யப் போவதாக பேச்சு அடிபட்டு வருகின்றது.
மனைவி ஆர்த்தியின் சரியான பதிலடி
இவர்களின் விவாகரத்து சர்ச்சைக்கு ஜெயம் ரவி அமைதி காத்து வந்த நிலையில், அவரது மனைவி ஆர்த்தி தக்க பதிலடி ஒற்றை புகைப்படத்தில் கொடுத்துள்ளார்.
அதாவது ஜெயம் படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிப்பிடும் விதமாக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘காதல் என்னும் வார்த்தை; அது வார்த்தை அல்ல வாழ்க்கை’ என்று கேப்ஷனும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் தன்னைப் பற்றிய விவாகரத்து சர்ச்சைக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.
Tamizha Tamizha: பார்த்த முதல் நாளே இங்கிலீஷ் பட முத்தம்! காதலன் செயலை அரங்கத்தில் போட்டுடைத்த காதலி
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |