Adjust பண்ணிட்டு வாங்க என்ற தயாரிப்பாளர்... மகள் இருக்கா என மறுப்பு தெரிவித்த மீனா
நடிகை மீனா திரிஷ்யம் படத்தில் நடிக்கும் முன்பு தனது அனுபவத்தை தற்போது கூறியுள்ளார்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக இவரது கணவர் சில ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் மோகன் லாலுடன் நடித்த திரிஷ்யம் என்ற படத்தில் நடித்து, மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
திரிஷ்யம் திரைப்படம்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அந்த படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், பல நாட்கள் முடித்து எனக்கு கம்பேக் கொடுத்த படம்தான் திரிஷ்யம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது... ஆனால் கேரளாவில் படப்பிடிப்பு இருந்ததால், தயாரிப்பாளரிடம் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
ஆனால் தயாரிப்பாளர் சற்று அட்ஜெஸ்ட் செய்து வரக்கேட்ட போது, தனது மகளுக்கு 2 வயது தான் ஆகியுள்ளது அவளை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது என்று கூறி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முதலில் சரி என்று கூறிவிட்டு சென்ற படக்குழுவினர், நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் இல்லாமல் வேறு யாரையும் நினைத்து பார்க்கமுடியாது. உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்து தருகிறோம். தயவு செய்து வாங்க" என்று கூறினார்களாம். அவ்வாறு தான் இந்த படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |