8 மாத கர்ப்பிணியான பிரபல நடிகை திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
மலையாள நடிகையும், மருத்துவருமான பிரியா மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை பிரியா
மலையாள சீரியல் நடிகையான பிரியாவிற்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கர்ப்பமாக இருந்துள்ளார்.
வழக்கமாக செய்யும் கர்ப்ப கால பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ள ப்ரியாவிற்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையை காப்பாற்றி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருக்கும் நிலையில், பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு ஒரே பெண்ணாக இருந்து வரும் நிலையில், தனது முதல் குழந்தையை வரவேற்க கணவன் மனைவி இருவரும் தயாராக இருந்துள்ளனர்.
ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின்பு சீரியலிலிருந்து விலகி, மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். வெறும் 35 வயதில் ஒரு கர்ப்பிணி நடிகை இவ்வாறு மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகையின் மறைவிக்கு ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |