எனக்கு ரித்திக் ரோஷன் மாதிரியான மாப்பிளை வேண்டும்! திருமணம் குறித்து மனந்திறந்த மீனா
எனக்கு ரித்திக் ரோஷன் போன்று ஒரு மாப்பிளை வேண்டும் என அம்மாவிடம் அடம்பிடித்த மீனாவின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 80 கள் மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
இவர் நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து “முத்து” என்ற திரைப்படத்தின் மூலம் உலக முழுவதும் பிரபலமானார்.
இவரின் யதார்த்தமான முக அமைப்பாலும் குழந்தை சிரிப்பாலும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
எனக்கு ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளை வேண்டும்
இந்நிலையில் மீனாவில் கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், சற்று வருத்தத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சின்ன சின்ன விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமிபத்தில் இவர் பிரபல ஊடகமொன்றுக்கு கொடுத்த பேட்டியில், “நான் சின்ன வயதில் ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிளை பாருங்க”எனக் கூறினேன்.
“எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார். மீனாவின் முதல் வாழ்க்கை முற்றுப் பெற்ற நிலையில், இரண்டாவது திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.