30 அடி உயர விளம்பர பதாகையில் சிக்கிய பறவை! உயிர் காத்த காவலர் ..வைரலாகும் வீடியோ
பெங்களூரு நகரின் ராஜாஜிநகர் போக்குவரத்து காவல் நிலைய காவலரான சுரேஷ் என்பவர் 30 அடி விளம்பர பதாகை ஒன்றில் சிக்கி தவித்து வந்த பறவையை காத்த நெகிழ்ச்சி சம்பவ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி குல்தீப் குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் “யாரும் பார்த்திடாத, அறிந்திடாத காவலரின் முகம்” என இதற்கு அவர் கேப்ஷனும் கொடுத்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
The hidden and unexplored side of a policemen. Well done Mr Suresh from @rajajinagartrps pic.twitter.com/D9XwJ60Npz
— Kuldeep Kumar R. Jain, IPS (@DCPTrWestBCP) December 30, 2022
அதுமட்டுமின்றி கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் காவலர் சுரேஷின் செயலை பாராட்டியுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளை அந்த காவலருக்கு கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகி வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.