மீனா கணவர் உயிரைப் பறித்த நுரையீரல் தொற்று! நுரையீரலை பாதுகாக்க எந்தெந்த உணவு உட்கொள்ள வேண்டும்?
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனாவின் கணவர்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நுரையீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்துவந்ததால், கொரோனா தொற்றுடன் இது அதிகமாக நுரையீரலை பாதித்துள்ளது.
மேலும் புறாவின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால் இவருக்கு நுரையீரல் தொற்று ஆரம்பமானதாக கூறப்படுகின்றது. மாற்று நுரையீரல் கிடைப்பதற்கு ஏற்பட்ட தாமதம் இறுதியில் இவரது உயிரைப் பறித்துள்ளது.

நுரையீரல்
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான நுரையீரல் அவசியம். உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதும் கார்பன்டைக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.
ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
மாசடைந்த சுற்றுச்சூழலால் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் தொற்றுகிருமிகள் நம் உடலுக்குள் நுழைகின்றன.
இதனால் நுரையீரல் மாசடைவதால் சளி, இருமலில் தொடங்கி பல்வேறு சுவாச பிரச்னைகளை உருவாக்குகிறது. எனவே நுரையீரலை ஆரோக்கியமாகவும் பத்திரமாகவும் பாதுகாக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பூண்டு
இயற்கையாகவே பூண்டில் இருக்கும் பைட்டோநியூண்ட்ரியண்ட்டான அல்சின் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது, அத்துடன் புற்றுநோய் எதிர்ப்பியாகவும் செயல்படுவதுடன் நுரையீரலை நோய்களில் இருந்தும் பாதுகாப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கீரைகள்
கீரைகளில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது, அடிக்கடி உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது.

இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, சளி தொல்லை இருக்கும் நாட்களில் இஞ்சியுடன் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் பலனை தரும்.

அப்ரிகாட்
அப்ரிகாட் பழத்தில் உள்ள விட்டமின் சி, விட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லைகோபீன் போன்ற சத்துக்கள் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் இருக்கும் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நுரையீரலை பாதுகாப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது, எனவே தினமும் சிறிதளவேனும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அவகோடா
அவகோடாவின் விட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின் மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, அவகோடாவை சாப்பிட்டு வந்தால் ஆர்திரிடிஸ், நுரையீரல் கோளாறுகளை பாதுகாப்பதாக சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
