கிளாமருக்கு NO சொன்ன மாளவிகா இப்போ எப்படி இருக்காரு பாருங்க- வைரல் புகைப்படங்கள் இதோ!
கிளாமருக்கு NO சொன்ன மாளவிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மாளவிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா, இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான “உன்னை தேடி” என்ற படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் திரைப்படங்களில் வரும் கவர்ச்சி நடனங்களையும் ஆடி இருக்கிறார்.
இப்படி 90ஸ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மாளவிகா காலங்கள் செல்ல செல்ல தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய் விட்டார்.
சிவன் கோயில் சேலையில் பிரார்த்தணை
இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தையொன்றும் இருக்கின்றது.
குடும்பம், குழந்தை என இருந்தாலும் மாளவிகா அவரின சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், சிவன் கோயிலில் சேலையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனின் கவர்ச்சியின் உச்சத்திலிருந்த மாளவிகா சேலையில் கன்னியமான பெண்ணாக மாறியிருக்கிறார்.
மேலும் புகைப்படங்களுக்கு கீழ் “ இதுவும் அழகாக தான் இருக்கின்றது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |