அதிகமான விட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா? தெரிஞ்சா சாப்பிட மாட்டீங்க..
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விட்டமின் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஏனெனின் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தாண்டி தற்போது ஏகப்பட்ட உணவு வகைளில் வாங்கி சாப்பிடுகிறோம்.
இதன் காரணமாக சாதாரண காய்ச்சல், தலைவலியை கூட யாராலும் தாங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி வரும் பிரச்சினைகளை சரிச் செய்து கொள்வதற்காக சிலர் விட்டமின் மாத்திரைகளை எடுத்து கொள்வார்கள்.
இதனால் நன்மைகள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பக்க விளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் விட்டமின் மாத்திரைகள் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புக்களை தொடர்ந்து பார்க்கலாம்.
வைட்டமின் மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்புகள்
1. விட்டமின் ஈ மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
2. அதிகமான விட்டமின் டி மாத்திரைகள் உடலில் நச்சுத்தன்மை மற்று எடை இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
3. விட்டமின் சி மாத்திரைகளில் மற்ற மாத்திரைகளை விட பக்க விளைவுகள் குறைவு. எனினும் அதிகம் எடுத்தால் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்.
4. விட்டமின் ஏ மாத்திரைகள் அதிகமானால் ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
5. அளவுக்கு அதிகமான பி12 விட்டமின் மாத்திரைகள் சிறுநீரின் மூலம் வெளியேறும். எனினும் தலைச்சுற்றல் பிரச்சினை ஏற்படலாம்.
முக்கிய குறிப்பு
மருத்துவரின் பரிந்துரைகளின்றி இது போன்ற வில்லைகளை வாங்கி எடுத்து கொள்வதை தவிர்க்கவும்.