கருப்பு நிற நைட்டியில் கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட மகாலட்சுமி!
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான மகாலட்சுமி, கருப்பு நிற நைட்டியில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
நைட்டியுடன் இணையத்தை வலம் வரும் மகாலட்சுமி
மேலும் தயாரிப்பாளர் ரவீந்தர் உடல் பருமனில் மகாவை விட பல மடங்கு பெரியவராக இருக்கிறார். இவர் மீது காதல் வர என்ன காரணம் என பல கேள்விகள் எழுப்பி வந்தார்கள்.
ஆனால் இது தொடர்பில் எந்த கவலையும் இல்லாமல் தங்களின் குடும்ப வாழ்க்கையில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரவீந்தர் விமர்சகர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான சில விடயங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது நைட்டியுடன் இருக்கும் புகைப்படம் பகிர்ப்பட்டுள்ளது. இதில் அவர் எங்கு நைட்டி வாங்கலாம் என்பதையும் அவருடைய ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ தற்போது நைட்டி வியாபாரமா? ” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.