மனைவியுடன் வாழும் வாழ்க்கை குறித்து பேசிய ரவீந்தர்! என்ன சொல்லியிருக்கிறார்?
தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவியுடன் வாழும் வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரைக்கு அறிமுகம்
கடந்த 2007 ஆம் ஆண்டு “அரசி” என்ற சீரியலில் மூலம் சின்னத்திரைக்குள் வந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லத்தனமான பார்வையும், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் தன்மையும் தான் இன்று மக்கள் மத்தியில் மகாலட்சுமியை நிலைக்க செய்துள்ளது.
இதனை தொடர்ந்து 2007 தொடக்கம் இன்று வரை சின்னத்திரையில் ஒரு அசைக்க முடியாத நடிகை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மறுமணத்தில் குஸியாக இருக்கும் ரவீந்தர் - மகா
மகாலட்சுமிக்கும், ரவீந்தருக்கும் இந்த திருமணம் மறுமணம் என்பதால் பல நெகட்டிங் கமண்ட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் ரவீந்திரனின் தோற்றமும் சற்று மகாலட்சுமியை விட அதிகமாக இருப்பதால் பல விமர்சனங்களுக்கு ஆளாகினார்கள். ஆனாலும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கும் தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பதிலடிக் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரவீந்தர் அவருடைய சமூக வலைத்தளங்களில் கருப்பு நிற ஆடை அணிந்து தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படத்தை போட்டு “ உன் சிரிப்பில் சொர்கத்தை கண்டேனடி” என கவிதை எழுதி பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த மகாலட்சுமி, “ நன்றி என் காதலே,என்னை உலகத்திலேயே பெருமை மிகுந்த மனைவியாக மாற்றுகிறாய்” என பதில் பதிவு பகிர்ந்துள்ளார். மேலும் இவர்களின் இது போன்ற பதிவுகள் இவர்களை விமர்சனம் செய்தவர்களுக்கு சிறந்த பதிலடியாய் போய் சேரும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.